சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
டோலிவுட்டில் கடந்த வெள்ளிக்கிழமை(அக்டோபர் 2) திரைக்கு வந்த சிவம் படம் கலவையான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கின்றது. நடிகர் ராம், நடிகை ராக்ஷி கண்ணா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த சிவம் படத்தின் நீளமே படத்தின் எதிர்மறையான விமர்சனங்களுக்கு காரணம் என கூறப்பட்டது. எனவே படத்தின் நீளத்தைக் குறைக்க படக்குழுவினர் ஏற்பாடுகள் செய்தனர். தற்போது இப்படத்திலிருந்து 20 நிமிடக் காட்சிகள் கத்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதால் இப்படத்திற்கு உண்டான எதிர்மறை விமர்சனங்கள் நீங்கும் எனவும், இதனால் படத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். இயக்குனர் ஸ்ரீனிவாச ரெட்டி இயக்கிய சிவம் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.