சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து டோலிவுடின் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா கில்லிங் வீரப்பன் என்ற படத்தை இயக்கி வருகின்றார். கன்னட நடிகர் சிவராஜ் குமார் இப்படத்தில் வீரப்பனை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். டில்லியைச் சேர்ந்த நாடக நடிகர் சந்தீப் வீரப்பனாக நடிக்கின்றார். கன்னட நடிகைகள் பருல் யாதவ் மற்றும் யக்னா ஷெட்டி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் உருவாகும் இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் தெலுங்கு, கன்னட மற்றும் தமிழ் மொழியிலும் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகின்றன. இப்படத்தை நவம்பரில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்களை அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில் வெளியிடவும் படக்குழுவினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.