‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

தற்போது தமிழில் சுந்தர். சி இயக்கும் 'மூக்குத்தி அம்மன்-2' படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா, இனியா, யோகி பாபு, துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் 'மன சங்கர வர பிரசாத் கரு' என்ற படத்தின் நயன்தாரா முதல் தோற்றத்தையும் நேற்று வெளியிட்டுள்ளார்கள். அதில், நயன்தாராவின் கேரக்டர் பெயர் சசிரேகா என்று இடம்பெற்றுள்ளது. அதோடு பிரகாசமான மஞ்சள் நிற சேலையில், முத்து நெக்லஸ் மற்றும் வளையல்கள் உள்ளிட்ட பாரம்பரிய நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார் நயன்தாரா. கருப்பு கைப்பிடி கொண்ட குடையை ஏற்றியபடி ஒரு பண்டிகை பின்னணியில் காணப்படும் நயன்தாரா, நேர்த்தியையும் வசீகரத்தையும் வெளிப்படுத்துகிறார். இப்படம் 2026ம் ஆண்டு சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகிறது.