சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே உருவாகி வந்த கூலி திரைப்படம் நேற்று வெளியானது. ரஜினி படம் என்றாலே அதில் மற்ற மொழிகளை சேர்ந்த நடிகர்கள் கூட ஆர்வமுடன் கலந்து கொண்டு நடிப்பார்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜும் அப்படிப்பட்ட பிறமொழி நடிகர்களை தேடி பிடித்து நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுபவர் தான். அப்படி இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் தான் மலையாள நடிகர் பாபுராஜ்.
இவர் மலையாளத்தில் மிகப்பெரிய வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர். 3௦ ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருகிறார். இரண்டு படங்களை இயக்கியும் உள்ளார். தவிர பிரபல நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவரும் கூட. இப்போது நடைபெற்று வரும் நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு வேட்பு மனு தாக்கல் செய்து பின் சர்ச்சை காரணமாக வாபஸ் பெற்றுக் கொண்டவர்.
தமிழில் ஸ்கெட்ச், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் மெயின் வில்லனாக நடித்த இவரை கூலி படத்தில் ஒப்புக்கு சப்பானியாக ரஜினிக்கு பின்னால் நிற்கும் 18 பேரில் ஒரு நபராக நிற்க வைத்து வெறும் இரண்டு மூன்று காட்சிகளில் இடம் பெற வைத்து ஒரு வசனம் கூட பேசவிடாமல் வீணடித்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.
இதற்கு முன் பீஸ்ட் படத்தில் கூட நல்ல நடிப்புத் திறமை கொண்ட மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ, இயக்குனர் நெல்சன் தன்னை சரியாக பயன்படுத்தவில்லை, வீணடித்து விட்டார் என்று அந்த சமயத்தில் பரபரப்பாக குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.