ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே | விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் | நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் | உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் அதிர்ச்சி அளித்த பிரபல குணச்சித்திர நடிகர் | மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் |
மலையாள திரையுலகில் நடிகர் பஹத் பாசிலுக்கு வெற்றி படமாக அமைந்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் ஒரு குணசித்திர நடிகராக அறிமுகமானவர் தான் அலான்சியர் லே லோபஸ். எதார்த்தமாக நடித்திருந்த அவருக்கு அந்த படத்தை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்தன. ஒரு கட்டத்தில் மீடு குற்றச்சாட்டுக்கும் ஆளாகி அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு அதிலிருந்து வெளிவந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் போலீஸ் யூனிபார்மில் மெலிந்த உடல் தோற்றத்துடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
பின்னர் இது அவர் தற்போது நடித்துள்ள 'வேற ஒரு கேஸ்' என்கிற படத்திற்காக அவர் நடிக்கும் கதாபாத்திரம் என்று தெரிய வந்தாலும் இவர் உடல் மெலிந்து இருப்பதற்கு காரணம் என்ன, உடல் பிரச்னையா என்றும் ரசிகர்களுக்கு சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் செபி சவுகத் கூறும்போது, “அலான்சியர் லே நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருக்கிறார். இந்தப் படத்தின் கதை மற்றும் அவரது கதாபாத்திரம் குறித்து அவரிடம் பேசும்போது பேச்சுவாக்கில் இந்த கதாபாத்திரத்திற்கு உடல் எடையை குறைத்து இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் அதற்காக சில டிப்ஸ்களையும் சொல்லியிருந்தேன்
அதன்பிறகு படப்பிடிப்பு துவங்கும் சமயத்தில் அவருக்கு ஆடை அளவு எடுப்பதற்காக சென்றபோது தான் அவர் இப்படி மெலிந்து இருப்பதை பார்த்தேன். ஏதாவது உடல் பிரச்னையா என்று கேட்டபோது, இல்லை இந்த படத்திற்காக நீங்கள் சொன்ன டயட்டை கடைபிடித்து உடல் எடையை குறைத்துள்ளேன் என்று கூறி என்னை ஆச்சரியப்படுத்தினார். மற்றபடி சமீபத்தில் டப்பிங் பேச வந்தபோது அவர் மீண்டும் தனது பழைய தோற்றத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார். அதனால் ரசிகர்கள் இவர் குறித்து தேவையில்லாமல் புதிய கட்டுக் கதைகளை உருவாக்குவதை தவிருங்கள்” என்று கூறியுள்ளார்.