புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
கடந்த வருடம் தெலுங்கு திரையுலகில் இருந்து வரலாற்று மற்றும் புராண படங்கள் சில வெளியாகி வரவேற்பு பெற்றன. அந்த வகையில் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வருகிறது ‛கண்ணப்பா'. நடிகர் விஷ்ணு மஞ்சு தயாரித்து நடித்துள்ள இந்த படத்தை முகேஷ் குமார் சிங் என்பவர் இயக்கியுள்ளார். பாகுபலி கதாசிரியர் விஜயந்திர பிரசாந்த் இந்த கதையில் மிக முக்கிய பங்காற்றி உள்ளார். அது மட்டுமல்ல மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கியமான சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள் என்பதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தில் மோகன்லால் நடிக்கும் கிராதா என்கிற கதாபாத்திரம் மற்றும் அவரது தோற்றம் குறித்த போஸ்டர் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாயகன் விஷ்ணு மஞ்சு மோகன்லாலின் கதாபாத்திரம் குறித்து கூறும்போது, “படத்தில் மோகன்லாலின் அறிமுக காட்சியே இரண்டு நிமிடம் இடம்பெற இருக்கிறது. அந்த காட்சியில் தியேட்டரே அதிரப்போவது நிச்சயம். ரசிகர்கள் எதிர்பாராத விதமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த கதாபாத்திரம் குறித்து அவர் கூறும்போது, “நாங்கள் இந்த கதையை எழுதியபோது ஒரு கதாபாத்திரம் தேவை இல்லை என்று அதை நீக்கி விட்டோம். பிறகு பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்திடம் இந்த கதை குறித்து நாங்கள் பேசியபோது, நீக்கிய அந்த கதாபாத்திரம் குறித்தும் நாங்கள் கூறினோம். அப்போது அவர் எதற்காக அந்த கதாபாத்திரத்தை நீக்கினீர்கள். கதைக்கு அந்த கதாபாத்திரம் இருந்தால் தான் ஒரு தெளிவு கிடைக்கும் என்று அதன் முக்கியத்துவத்தை கூறினார். அப்போதுதான் எங்கள் முடிவு தவறு என உணர்ந்தோம். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை மீண்டும் படத்தில் இணைத்தோம். அதுதான் மோகன்லாலின் கிராதா கதாபாத்திரம்” என்று கூறியுள்ளார்.