திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
சாதாரண மனிதர்களுக்கே தாங்கள் வாங்கும் வாகனங்களுக்கு பேன்சியான பதிவு எண் கிடைக்க வேண்டும் என ஆர்வம் இருக்கும்போது பிரபலங்கள் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? அந்த வகையில் கேரளாவில் தற்போது மலையாள நடிகரான குஞ்சாக்கோ போபன், நிவின் பாலி இருவரும் சமீபத்தில் புதிய கார்களை வாங்கினார்கள். இந்த காருக்கு தாங்கள் விரும்பிய பதிவு எண் வேண்டும் என கேட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் குஞ்சாக்கோ போபன் 0459 என்கிற எண் வேண்டும் என்று கேட்டு விண்ணப்பித்திருந்தார். இது ஒன்றும் அவ்வளவு பேன்சியான நம்பர் இல்லை என்பதால் போட்டி எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனாலும் இந்த நம்பருக்கு திடீரென டிமாண்ட் அதிகரித்து பல பேர் இதை வேண்டுமென விண்ணப்பிக்க இந்த தகவல் தெரிந்ததும் 20 ஆயிரம் ரூபாய் செலுத்தி இந்த நம்பரை தனக்காக பதிவு செய்து விட்டார் குஞ்சாக்கோ போபன்.
அதேபோல நடிகர் நிவின்பாலி தனக்கு 0011 என்கிற நம்பர் வேண்டுமென விண்ணப்பித்திருந்தார். இது அடிப்படையிலேயே பேன்சி நம்பர் என்பதால் இதற்கு நிறைய போட்டி இருந்தது. போட்டித் தொகையை ஒவ்வொருவரும் உயர்த்திக் கொண்டே வர ஒரு கட்டத்தில் இந்த எண்ணுக்காக 2.34 லட்சம் ரூபாயை பதிவுத்தொகையாக தர நிவின் பாலி ஒப்புக்கொண்டார். ஆனாலும் அதே எண் தான் தங்களுக்கும் வேண்டும் என கேட்ட இன்னொரு தனியார் நிறுவனம் 2.95 லட்சம் வரை தந்து அந்த நம்பரை கைப்பற்றி விட்டது.
இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் 001 என்கிற எண்ணுக்கு 25.52 லட்சம் ரூபாயும் 007 என்கிற எண்ணுக்கு 46.24 லட்சம் என அந்த பேன்சி நம்பர்களை பெற போட்டி போட்டு பணம் கட்டி பதிவு செய்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு இந்த வகையிலேயே கோடிக்கணக்கில் அதிகாரப்பூர்வ வருமானம் வருகிறது என்பது ஆச்சரியம் தான்.