புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
நடிகர் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து கடந்த 2019ல் லூசிபர் என்கிற ஹிட் படத்தை கொடுத்தார். அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள எம்புரான் திரைப்படம் இன்று 27ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் இதிலும் நடித்துள்ளனர். பல புதிய நடிகர்கள் பாலிவுட்டில் இருந்து மட்டும் இல்லாமல் ஹாலிவுட்டில் இருந்தும் இதில் இடம் பெற்றுள்ளனர். அதே சமயம் இந்த படத்தின் வில்லன் யார் என்பது இப்போது வரை அறிவிக்கப்படாமல் சஸ்பென்ஸ் ஆகவே வைக்கப்பட்டுள்ளது.
லூசிபர் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருந்தார். படத்தின் கதைப்படி கிளைமாக்ஸில் அவர் கொல்லப்படுகிறார். அதே சமயம் இந்த இரண்டாம் பாகம் கேரள அரசியல் கதைக்களத்துடன் சர்வதேச அளவிலான கதைக்களத்தையும் தீவிரமாக கலந்து உருவாக்கப்பட்டுள்ளதால் வில்லன் கதாபாத்திரமும் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வில்லன் குறித்து அவரது பின்புற தோற்றத்துடன் உருவான போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது.. அதை பார்த்துவிட்டு பல பேர் அது நடிகர் பஹத் பாசில் தான் என்று கூறினார்கள்.
ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் பஹத் பாசில் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார் பிரித்விராஜ். இப்போது இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அமீர் கான் என்றும், இல்லையில்லை டே ஆப்டர் டுமாரோ படத்தில் வில்லனாக நடித்த ஹாலிவுட் நடிகர் ரிக் யுனே தான் அவர் என்றும் ரசிகர்கள் பலர் ஆருடம் கூறி வருகிறார்கள். அனேகமாக நாளை படம் வெளியான பிறகு தான் இந்த கதாபாத்திரத்தில் யார் நடித்துள்ளார் என்பது தெரியவரும்.