2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் விஸ்வக் சென். ஐதராபாத்தில் உள்ள இவரது வீட்டில் விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றும் 2.2 லட்சம் ரூபாய் பணமும் களவு போயுள்ளது. ஞாயிறு அதிகாலை 5 மணி அளவில் மூன்று மாடி கொண்ட அவரது வீட்டில் அவரது சகோதரி வான்மை தங்கியிருக்கும் மூன்றாவது மாடி வழியாக வீட்டுக்குள் நுழைந்த திருடன் சத்தம் காட்டாமல் நகையையும் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிகிறது.
நீண்ட நேரம் கழித்து கண் விழித்த வான்மை வீட்டில் உள்ள பொருள்கள் எல்லாம் அலங்கோலமாக கிடப்பதை பார்த்து அதன் பிறகு நகையும் பணமும் களவு போய் உள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தற்போது விஸ்வக் சென்னின் தந்தை இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். வீட்டில் கிடைத்த கைரேகைகளையும் சிசிடிவி காட்சிகளையும் வைத்து போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.