பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் | விவாகரத்து ஆனவர்களுடன் கனிவோடு இருங்கள் : மீரா வாசுதேவன் | தாடி பாலாஜிக்கு 1 லட்சம் மருத்துவ உதவி: தயாரிப்பாளர் வழங்கினார் | பிளாஷ்பேக்: 200 படங்களில் ஒரேஒரு படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்தவர் | அரசன் படத்தில் சிம்பு ஜோடி யார் | வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ் | எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல் | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு |

புதிதாக வெளியாகும் பல பிரம்மாண்ட படங்கள் தங்களது படத்தின் டீசர், டிரைலர் ஆகியவற்றை நியூயார்க்கில் உள்ள டைம் ஸ்கொயரில் வெளியிடுவதை ஒரு மிகப்பெரிய கவுரவமாகவே நினைக்கின்றனர். அந்த வகையில் மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எம்புரான் படத்தின் டிரைலர் தற்போது டைம் ஸ்கொயரில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தருணத்தில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மோகன்லாலின் ரசிகர்கள் அங்கே கூடி ஆரவாரம் செய்து இந்த டீசரை பார்த்து ரசித்தனர்.
இது குறித்து படத்தின் இயக்குனரும், நடிகருமான கூறும்போது, “உலகெங்கிலும் இருந்து ரசிகர்களிடம் இவ்வளவு அன்பு கிடைத்திருப்பது மிகப் பெருமையாக இருக்கிறது. அதிலும் டைம் ஸ்கொயரில் எம்புரான் டீசர் திரையிடப்பட்ட போதும் சரி.. சாதனை படைக்கும் அளவிற்கு எம்புரான் டிக்கெட் விற்கப்பட்டதிலும் சரி இந்த படத்தின் மீது அவர்கள் எவ்வளவு எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. அவர்களுடன் சேர்ந்து பெரிய திரையில் இந்த அனுபவத்தை கண்டுகளிக்க நானும் தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
கடந்த 2019ல் பிரித்விராஜ் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக தான் இந்த எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.