'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் |
மலையாள திரையுலகில் இயங்கி வரும் மலையாள நடிகர் சங்கம் அம்மா என்கிற பெயரில் அழைக்கப்படுகிறது. மறைந்த நகைச்சுவை நடிகர் இன்னோசென்ட் பல வருடங்களாக இதன் தலைவராக இருந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் மோகன்லால் இதன் தலைவராக பொறுப்பேற்று இருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கமும் அதன் பிறகு ஏற்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டுகள் காரணமாக மலையாள சங்கத்திலிருந்து மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். மீண்டும் விரைவில் மலையாள நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இருந்தாலும் நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளில் வழக்கம் போல மோகன்லால் உள்ளிட்டோர் தொடர்ந்து கவனம் செலுத்தி கொண்டு தான் இருக்கின்றனர்.
அந்த வகையில் மலையாள திரையுலகில் ரொம்பவே வயதான நடிகர்களுக்கு அவர்கள் கடைசி காலம் நிம்மதியாக கழிய வேண்டும் என்பதற்காக நடிகர் சங்கம் சார்பில் ஓய்வு கிராமம் ஒன்றை துவங்கி செயல்படுத்த நடிகர் மோகன்லால் ஆலோசனை செய்து வந்தார். இதற்கு மம்முட்டி, சுரேஷ் கோபி போன்ற மற்ற முன்னணி நடிகர்களிடம் இருந்தும் பல நடிகர் சங்க உறுப்பினர்களிடமிருந்தும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சஞ்சீவனி என்கிற பெயரில் இந்த ஓய்வு கிராமத்திற்கான துவக்க விழா நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.