அடுத்தாண்டு ஏப்., 10ல் ‛இட்லி கடை' ரிலீஸ் | கங்கை நதி கரையில் நடந்த ரம்யா பாண்டியன் திருமணம் : யோகா மாஸ்டர் லோவலை மணந்தார் | 5 முறை தற்கொலை முயற்சி? - கண்கலங்க வைத்த சத்யா | சுந்தரி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீகோபிகா | குழந்தைக்கு 'நிலா' என பெயர் சூட்டிய ரித்திகா | குட் நியூஸ் சொன்ன நிவேதிதா - சுரேந்தர் | ஓடிடியில் வந்தது 'வேட்டையன்': தாமதமாகும் 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | 50வது நாளில் 'லப்பர் பந்து' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'அமரன்' | 'பான் இந்தியா', சூர்யாதான் இன்ஸ்பிரேஷன் - ராஜமவுலி பேச்சு |
இயக்குனர் சிவாவின் தம்பியான நடிகர் பாலா, அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்தே உட்பட பல படங்களை நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்து வரும் இவர் கடந்த 2010ல் பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகள் பிறந்த நிலையில் 2019ம் ஆண்டு விவாகரத்து செய்தார்கள்.
அதன் பிறகு எலிசபெத் உதயன் என்பவரை 2021ம் ஆண்டு திருமணம் செய்த நடிகர் பாலா, அவரையும் 2024ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இப்படியான நிலையில் நடிகர் பாலாவின் முன்னாள் மனைவியான அம்ருதா தற்போது இசையமைப்பாளர் கோபி சுந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், தனது முன்னாள் கணவரான நடிகர் பாலா, தன்னையும் தனது மகளையும் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக தெரிவித்திருக்கிறார். அதையடுத்து இன்று காலை கேரளா போலீசார் நடிகர் பாலாவை கைது செய்துள்ளார்கள். அவர் மட்டுமின்றி பாலாவின் மேனேஜர் ராஜேஷ், நண்பர் உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.