லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் |
கன்னட நடிகர் தர்ஷன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது காதலி நடிகை பவித்ரா கவுடாவுக்கு ரேணுகா சுவாமி டார்ச்சர் கொடுத்தார் என்பதால் இந்த காரியத்தை அவர் செய்தார் என சொல்லப்படுகிறது. அவருடன் பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன் அங்கே தனக்கு முறைகேடாக சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டதாக வெளியான புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார், இதற்கிடையே அவர் தனக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிப்பதும் அது நிராகரிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது 100 நாள் சிறைவாசத்தை பூர்த்தி செய்துள்ளார் தர்ஷன். இப்போதும் தனக்கு ஜாமீன் வேண்டும் என கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இன்னொரு பக்கம் தர்ஷனின் குடும்பத்தார் தற்போது பெல்லாரி சிறையில் தர்ஷனுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்று மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். ஆனால் சிறைத்துறை அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் சிறை விதிகளுக்கு உட்பட்டு தர்ஷனுக்கு உரிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன என்று கூறியுள்ளார்.