'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம்! | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! | மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார் | கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய் | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா! | 2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம் | போக்சோவில் கைதான ஜானிக்கு தேசிய விருது வழங்கப்படுமா? | ஒரே நாளில் விஜய்யின் இரண்டு 'பூஜைகள்' | வேட்டையன் படத்தின் இடைவேளையில் விடாமுயற்சி டீசரா? |
பொதுவாக எந்த மொழி திரையுலகை எடுத்துக் கொண்டாலும் அதில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் தாங்களே சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கி தங்களது படங்களையோ அல்லது சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளை வெளிக்கொண்டுவரும் விதமாகவோ படங்களை தயாரித்து வருகின்றனர். நடிகர்களுடன் ஒப்பிடும்போது படத்தயாரிப்பில் இறங்கும் நடிகைகளின் எண்ணிக்கை ரொம்பவும் குறைவு.
இந்த நிலையில் நடிகை ஹனி ரோஸ் தற்போது 'ஹனி ரோஸ் வெஞ்சர்ஸ்' என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். தமிழில் 'சிங்கம்புலி' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த ஹனிரோஸுக்கு, ஒருகட்டத்தில் மலையாளத்தில் வரிசையாக நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட் அடிக்க, மலையாளத்தில் முக்கியமான நடிகையாக மாறினார்.
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்த ஹனி ரோஸ் கிட்டத்தட்ட சினிமாவில் தான் நுழைந்து 20 வருடத்தை தொடப்போகும் நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “சினிமா என்பது ஒரு கனவு. ஒரு பேண்டஸி. எல்லோருக்கும் விருப்பமான ஒன்று. திரையுலகில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் இருந்திருக்கிறேன் என்கிறபோது நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். என்னுடைய இளமை, என்னுடைய வாழ்க்கை, என்னுடைய கற்றல்கள், என்னுடைய நட்புகள் எல்லாவற்றிலும் சினிமாவிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
அதனால் இந்த நேரத்தில் ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்கி நல்ல படைப்புகளை தயாரிப்பது என்பதை ஒரு கடமையாகவும் என்னுடைய குறிக்கோளாகவும் நான் நினைக்கிறேன். அதனால்தான் என்னுடைய பிறந்த நாளில் அதுவும் ஆசிரியர் தினத்தில் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். திறமையான படைப்பாளிகளை ஊக்குவித்து அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதே இந்த தயாரிப்பு நிறுவனம் துவங்கியதன் நோக்கம்” என்று கூறியுள்ளார் ஹனி ரோஸ்.