'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
மலையாள திரையுலகில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் படுக்கைக்கு அழைக்கும் கேஸ்டிங் கவுச் என்கிற கலாச்சாரம் இருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையும் இதை உறுதிப்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து சினிமாவில் பணியாற்றும் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் பலரும் இந்த அறிக்கைக்கு தங்களது வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிலர் தங்களது கசப்பான அனுபவங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பெங்காலி நடிகையான ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் தன்னிடம் இதே போன்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வெளிப்படையாக கூறியுள்ளார்.
பெங்காலி நடிகையான இவர் கடந்த 2004ல் வெளியான அகலே என்கிற படத்தின் மூலம் மலையாள திரை உலகில் நுழைந்தார். அதன் பிறகு 2009ல் மம்முட்டி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான பாலேரி மாணிக்கம் என்கிற படத்தில் நடிப்பதற்காக இவருக்கு வாய்ப்பு தேடி வந்தது. இதனைத் தொடர்ந்து கொச்சி வந்த அவர் ஒரு தனியார் ஹோட்டலில் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட அவர்களை சந்தித்தார். அப்போது படம் குறித்து விரிவாக பேச வேண்டும் என தனி அறைக்கு இயக்குனர் ரஞ்சித் அழைத்து சென்றுள்ளார்.
தன்னிடம் பேசிக்கொண்டே அவரது கை வளையல்களை பிடித்து விளையாட ஆரம்பித்த ரஞ்சித், ஒரு கட்டத்தில் தனது கழுத்தை தொடுவது அவருடைய கூந்தலை ஒதுக்கிவிட்டு சரி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட ஆரம்பித்தாராம். இதனால் அசவுகரியமாக உணர்ந்த ஸ்ரீலேகா ஒரு வழியாக தானாகவே அந்த அறையை விட்டு வெளியேறினாராம். மேலும் அன்று இரவு முழுவதும் அந்த ஹோட்டலில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பயத்துடன் எவரேனும் கதவைத் தட்டுவார்களோ என்கிற அச்சத்தில் தனது அறையில் இருந்த நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களை கதவிற்கு முட்டுக்கொடுத்து வைத்து விட்டு உறங்காமல் கழித்தாராம்.
விடிந்த பிறகு இது குறித்து தயாரிப்பாளரிடம் அவர் கூறியபோது அவர்கள் பெரிதாக அதற்கு ரியாக்சன் காட்டவில்லையாம். அதனால் தான் இந்த படத்தில் நடிக்கவில்லை எனக்கூறி கிளம்பினாராம். அவரது இந்த செயலால் தனக்கு டாக்ஸிக்கு கூட பணம் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ள ஸ்ரீலேகா மித்ரா அதன் பிறகு மலையாளத் திரையரங்கில் தனக்கு சில பட வாய்ப்புகள் வந்தாலும் இயக்குனர் ரஞ்சித்தின் குறுக்கீட்டால் எந்த வாய்ப்புகளும் அமையவில்லை என்று தற்போது கூறியுள்ளார்.
ரஞ்சித் மறுப்பு
மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தற்போது மவுனம் கலைத்துள்ள இயக்குனர் ரஞ்சித், ‛அந்த நடிகை என்னுடைய படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை. அதனால் தான் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை. மற்றபடி அவர் கூறுவது போன்று எந்த தவறான செயல்களிலும் நான் ஈடுபடவில்லை' என்று கூறியுள்ளார்.