ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவு, பல நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கியதுடன் பல மக்கள் வீட்டிலிருந்து வாழ்வாதாரம் இழக்கவும் காரணமாகவும் அமைந்துவிட்டது. பேரிடர் மீட்புக் குழுவும் இந்திய ராணுவ வீரர்களும் இணைந்து மீட்பு பணியிலும் நிவாரணப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டனர். அந்த சமயத்தில் இந்திய ராணுவத்தின் கவுரவமான லெப்டினென்ட் கர்னல் பொறுப்பு வகிக்கும் மோகன்லால் ராணுவ சீருடையில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
மேலும் தனது அறக்கட்டளை மூலமாக சுமார் மூன்று கோடி அளவிலான நிவாரண உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் கேரள மாநிலம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த யு-டியூப் சேனல் நடத்தி வரும் அஜு அலெக்ஸ் என்பவர் மோகன்லால் இப்படி ராணுவ சீருடை அணிந்து ராணுவ வீரர்களுடன் சேர்ந்து நிலச்சரிவு பாதித்த இடங்களை பார்வையிட்டது குறித்து கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து மலையாள நடிகர் சங்க செயலாளர் நடிகர் சித்திக் போலீசில் அளித்த புகாரின் பேரில் அஜு அலெக்ஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.