ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
நடிகர் மம்முட்டி தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரது சொந்த பட நிறுவனமே இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் இருக்கும் மகாதேவ் என்கிற சிறுவன் அந்தப் படத்தின் பூஜையன்று படப்பிடிப்பு தளத்தில் துறுதுறுவென்று சுற்றியுள்ளான். அவன் மம்முட்டியின் ரசிகன் என்றும் மம்முட்டி நடித்து கடந்த வருடம் வெளியான கண்ணூர் ஸ்குவாட் என்கிற படத்தை பலமுறை திரும்பத் திரும்ப பார்க்கிறான் என்கிற தகவலும் மம்முட்டியின் காதுகளுக்கு எட்டியது.
அதுமட்டுமல்ல அந்த சமயத்தில் சிறுவனின் பிறந்தநாளும் வரப்போகிறது என்பதை கேள்விப்பட்ட மம்முட்டி அவனது பிறந்த நாளன்று ஒரு லம்பார்கினி கார் பொம்மையை பரிசாக வாங்கிக்கொண்டு அந்த சிறுவனின் வீட்டிற்கே நேராக சென்றார். மம்முட்டியின் வருகையை எதிர்பாராத அந்த சிறுவனும் அவனது பெற்றோரும் மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். அவனுக்கு பிறந்தநாள் பரிசளித்து வாழ்த்தி விட்டு மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பினார் மம்முட்டி.