ஒரு மணி நேரத்திலேயே பொய் பேசிய கயாடு லோஹர் | கன்னடர்களின் கோபத்திற்கு ஆளான ராஷ்மிகா மந்தனா | ஒன்பது படங்களில் ஒன்றாவது வசூலைக் குவிக்குமா ? | இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா | பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் |
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகர் அந்தஸ்தில் பயணித்து வருபவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களாக அரசியல் பயணத்தையும் துவக்கிய சுரேஷ்கோபி தேசிய கட்சியான பா.ஜ.,வில் இணைந்து சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு திருச்சூர் எம்பி ஆகவும் தேர்வு செய்யப்பட்டு தற்போது மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவரது மகள் பாக்யாவின் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியின் முன்னிலையில் திருச்சூரில் நடைபெற்றது.
சுரேஷ்கோபியின் மூத்த மகன் கோகுல் சுரேஷ் ஒரு நடிகராக சில வருடங்களுக்கு முன்பே திரையுலகில் நுழைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சுரேஷ்கோபியின் இளைய மகன் மாதவ் சுரேஷ் விரைவில் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‛கும்மாட்டி களி' என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இன்னும் முதல் படம் வெளியாகாத நிலையில் தற்போது காதலில் விழுந்துள்ளார் மாதவ் சுரேஷ். மலையாளத்தில் ‛ரணம்' என்கிற படத்தில் நடித்த செலின் ஜோசப் என்பவரை தீவிரமாக காதலித்து வருகிறார் மாதவ் சுரேஷ்.
சமீபத்தில் செலினின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்த மாதவ், தாங்கள் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், “இன்று எனது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒருவரின் பிறந்தநாள். என்னுடைய வாழ்க்கையில் நான் கடுமையான சூழலில் இருந்த நிலையில் எதிர்பாராமல் என் வாழ்க்கையில் நுழைந்து எனக்கு பின்னால் ஒரு பாறையாக நிற்பவர். யாருடைய புன்னகை என்னுடைய நாளை பிரகாசமாக்குமோ, யாருடைய சத்தம் என் காதுகளில் இசை போல கேட்குமோ, யாருடைய வருகையால் எனக்கு உடனடி உற்சாகம் கிடைக்குமோ அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.