2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம்சரண், தான் திரையுலகில் நுழைந்த சமயத்திலேயே திருமண பந்தத்திலும் அடி எடுத்து வைத்தார். அப்பல்லோ குழுமத்தை சேர்ந்த வாரிசான உபாசனாவை அவர் திருமணம் செய்து கொண்டார். ஆதர்ச தம்பதியாக இருந்தாலும் பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த வருடம் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு 'க்ளின் காரா கொனிடேலா' என பெயர் சூட்டியுள்ளனர். கேட்பதற்கே வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று பலரும் இந்த பெயர் குறித்து குறிப்பிட்டு வந்தனர். இந்த நிலையில் தனது மகளின் இந்த தனித்தன்மை வாய்ந்த பெயர் குறித்து தான் பெருமைப்படுவதாகவும் இந்த பெயரை எதற்காக வைத்தோம், எங்கிருந்து இந்தப் பெயர் கிடைத்தது என்கிற புதிய தகவலை கூறியுள்ளார் ராம்சரனின் மனைவி உபாசனா.
அகமதாபாத்தில் உள்ள வனப்பகுதியைச் சேர்ந்த ஒரு ஆதிவாசி மக்களின் தனித்தன்மை வாய்ந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட போது அங்கிருந்த மக்களால் இந்த க்ளின் காரா என்கிற பெயர் கிடைத்தது என்று கூறியுள்ளார் உபாசனா. மேலும் இன்னொரு ஆச்சரிய தகவலாக தன்னுடைய அம்மாவும் ஆரம்பத்தில் தனக்கு க்ளின் காரா என பெயர் வைக்க நினைத்து இருந்ததாகவும் தற்போது தனது மகளுக்கு அந்த பெயரை சூட்டி உள்ளதாகவும் கூறியுள்ளார் உபாசனா.