ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

மலையாளத்தில் திரிஷ்யம்
என்கிற சூப்பர் ஹிட் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்
ஜீத்து ஜோசப். தொடர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் விதமான வெற்றிப்
படங்களை கொடுத்து இந்திய அளவில் மிகப்பெரிய இயக்குனர் என்கிற பெயரையும்
பெற்றுவிட்டார். இந்த நிலையில் தற்போது திரைப்படங்களையும் தாண்டி
வெப்சீரிஸ் உலகில் அடி எடுத்து வைத்துள்ளார் ஜீத்து ஜோசப். ஆனால்
இயக்குனராக அல்ல, ஒரு தயாரிப்பாளராக.. ஆம் ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்காக
'ரோஸ்லின் ; சீக்ரெட் ஸ்டோரீஸ்' என்கிற வெப்சீரிஸை தயாரிக்கிறார் ஜீத்து
ஜோசப்.
இந்த வெப்சீரிஸை இவரிடமும் இன்னொரு பிரபல இயக்குனரான அன்வர்
ரஷீத்திடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய சுமேஷ் நந்தகுமார் என்பவர்
இயக்குகிறார். அதுமட்டுமல்ல இந்த வெப்சீரிஸுக்கு விநாயகன் சசிகுமார்
என்பவர் தான் கதை, திரைக்கதை எழுதுகிறார். அந்தவகையில் இந்த வெப்சீரிஸில்
ஜீத்து ஜோசப்பின் பங்கு வெறும் தயாரிப்பாளர் மட்டுமே. கடந்த சில
தினங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.




