'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கு திரையுலகில் நடிகர் சாய் தரம் தேஜ் கவனிக்கத்தக்க இளம் நடிகராக வலம் வருகிறார். நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்து வாரிசு நடிகர்களில் ஒருவராக சினிமாவில் அறிமுகமான இவர் சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்காவின் மகன் ஆவார். தற்போது கஞ்சா சங்கர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்கள் பலரும் தங்களது தாய், மனைவி, சகோதரி, மகள் ஆகியோருக்கு ஏதோ ஒரு விதத்தில் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் வெளிப்படுத்தி வந்த நிலையில், சாய் தரம் தேஜ் தன் தாய்க்கு பெருமை சேர்க்கும் விதமாக தன்னுடைய பெயரையே தற்போது மாற்றிக் கொண்டுள்ளார்.
ஆம்... சாய் தரம் தேஜ் என்கிற தன்னுடைய பெயரை சாய் துர்கா தேஜ் என தன் அம்மாவின் பெயரும் சேர்ந்து வருமாறு மாற்றிக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “தேஜ் என்கிற பெயர் வரும்போது எனது தந்தை குடும்பத்தின் பெயர் ஞாபகத்திற்கு வரும். அதேபோல எனது தாயின் பெயரும் என்னுடன் இணைந்து இருக்க வேண்டும் என விரும்பினேன். அதற்காகவே இப்படி பெயரை மாற்றிக் கொண்டுள்ளேன்” என கூறியுள்ளார்.