முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

மலையாள திரையுலகிற்கு இந்த பிப்ரவரி மாதம் ஜாக்பாட் மாதம் என சொல்லும் விதமாக வாரம் ஒரு ஹிட் படம் வெளியாகி வருகின்றது. அதிலும் இரண்டு படங்கள் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி 50 கோடியை தொட்டுள்ளன. அந்த வகையில் கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி, ஓரளவு தெரிந்த முகங்களான நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ நடித்த பிரேமலு என்கிற படம் வெளியானது. தற்போது வரை 50 கோடியை தாண்டி இந்த படம் வசூலித்துள்ளது இந்தப் படத்தை கிரிஸ் ஏடி என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது. இதன் தெலுங்கு வெளியீட்டு உரிமையை பிரபல இயக்குனர் ராஜமவுலியின் மகனான எஸ்.எஸ் கார்த்திகேயா பெற்றுள்ளார். வரும் மார்ச்சில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் தெலுங்கில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. அதன் முதல் கட்டமாக பாகுபலி பாணியில் இந்த படத்தின் புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். பாகுபலி படத்தில் பிரபாஸும் அனுஷ்காவும் இணைந்து அம்பு விட்டது போல இந்த பிரேமலு ஜோடி ஒன்றாக இணைந்து காதல் அம்புகளை தொடுப்பதாக போன்று இந்த புரோமோ அமைந்துள்ளது.