பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழில் மாநகரம் படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல அறிமுகம் பெற்றவர் நடிகர் சந்தீப் கிஷன். தொடர்ந்து தமிழில் செலக்ட்டிவான படங்களில் நடித்து வந்தாலும் தெலுங்கில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் 'ஊரு பேரு பைரவகோனா' என்கிற படம் வெளியானது. படமும் ஓரளவு வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இதன் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக சமீபத்தில் தெலுங்கு மீம்ஸ் கிரியேட்டர்களை சந்திக்கும் விதமாக படக்குழுவினர் மீம்ஸ் மீட் ஒன்றை நடத்தினர். இதில் கலந்துகொண்ட மீம்ஸ் கிரியேட்டர்கள் பல கேள்விகளை நகைச்சுவையாக கேட்க, அதற்கு நகைச்சுவையாகவே பதில் அளித்தார் சந்தீப் கிஷன்.
ஒரு மீம் கிரியேட்டர் மட்டும் படத்தின் கதாநாயகிகள் வர்ஷா பொல்லாம்மா மற்றும் காவ்யா தப்பார் ஆகியோருடன் சந்தீப் கிஷன் அந்த படத்தில் நடித்தது குறித்து இரட்டை அர்த்தம் தொனிக்கும் விதமாக ஒரு கேள்வியை கேட்டார். அது சந்தீப் கிஷனை மட்டுமல்ல அருகில் இருந்த வர்ஷா பொல்லாம்மா மற்றும் படக்குழுவினரையும் சங்கடத்தில் நெளிய வைத்தது. இதைத் தொடர்ந்து அந்த மீம் கிரியேட்டரிடம் இதுபோன்ற கேள்விகளை ஜோக்கிற்காக கூட எப்போதும் கேட்கக் கூடாது என்று கடிந்து கொண்டார் சந்தீப் கிஷன். அவரது இந்த பதிலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.