2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
2023ல் மலையாள திரை உலகில் இதுவரை 234 படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் நடிகர் குஞ்சாக்கோ போபன் இந்த வருடம் 5 படங்களில் நடித்து அதிக படங்களில் நடித்தவர் என்கிற சாதனையை செய்துள்ளார். இந்த ஐந்து படங்களில் கடந்த மே மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனா 2018 படமும் ஒன்று. அதில் நான்கைந்து ஹீரோக்களுடன் இணைந்து இவர் நடித்திருந்தாலும் அந்த படம் இவரது நூறாவது படமாக அமைந்து வெற்றி படமாகவும் மாறியதில் குஞ்சாக்கோ போபனுக்கு இந்த வருடம் மகிழ்ச்சியான ஆண்டாகவே அமைந்துவிட்டது.
இதற்கு அடுத்ததாக நடிகர் மம்முட்டி நான்கு படங்களில் நடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இந்த வருட துவக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து வெளியான கிறிஸ்டோபர் படம் கைகொடுக்காவிட்டாலும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான கண்ணூர் ஸ்குவாட் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. மலையாளத்தில் மம்முட்டிக்கு ஒரு தீரன் அதிகாரம் ஒன்று என்று சொல்லும் அளவிற்கு அந்த படம் அமைந்துவிட்டது. அடுத்ததாக வெளியான காதல் தி கோர் படமும் விமர்சன ரீதியாகவும் மம்முட்டியின் துணிச்சலான நடிப்புக்கு பெரிய வரவேற்பையும் பெற்று தந்தது.
நடிகர் மோகன்லால் இந்த வருடம் மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதில் தமிழில் சிறப்பு தோற்றத்தில் நடித்த ஜெயிலர் படமும் ஒன்று. இந்த வருட துவக்கத்தில் புலிமுருகன் இயக்குனர் வைசாக்குடன் மீண்டும் இணைந்து நடித்த அலோன் திரைப்படம் தோல்வியை தழுவியது. அதே சமயம் இந்த வருட இறுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த நேர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்து மோகன்லாலுக்கு இந்த வருடத்தை சந்தோசமாக நிறைவு செய்து வைத்துள்ளது.
இவர்கள் தவிர பஹத் பாசில், டொவினோ தாமஸ், நிவின்பாலி ஆகியோர் தலா மூன்று படங்களில் நடித்துள்ளனர். துல்கர் சல்மான், பிரித்விராஜ் இருவரும் ஆளுக்கொரு படங்களில் மட்டுமே நடித்துள்ளனர்.