விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
மலையாளத்தில் பெரும்பாலும் முன்னணி நடிகர்களை வைத்தே படம் இயக்கி வெற்றிப்பட இயக்குனராக முதல் இடத்தில் பல வருட காலம் இருப்பவர். இயக்குனர் ஜோஷி. சமீபத்தில் இவரது இயக்கத்தில் ஆண்டனி என்கிற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து அடுத்ததாக மோகன்லாலை வைத்து இவர் ‛ரம்பான்' என்கிற படத்தை இயக்குகிறார். இது குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தந்தை மகள் பாசத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் மகள் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அறிமுகமாகிறார் நடிகை கல்யாணி பணிக்கர்.
இவர் மலையாள திரையுலகில் மிகப்பெரிய குணச்சித்திர நடிகையான பிந்து பணிக்கரின் மகள். விஜய் நடித்த லவ் டுடே திரைப்படத்தில் கதாநாயகி சுவலட்சுமியின் அம்மாவாக நடித்தவர் தான் பிந்து பணிக்கர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள வில்லன் நடிகரான சாய் குமாரை இவர் மறுமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிந்து பணிக்கருக்கும் அவரது முன்னாள் கணவர் பிஜூ நாயருக்கும் பிறந்த மகள் தான் இந்த கல்யாணி பணிக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.