மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

மலையாளத்தில் தற்போது டொவினோ தாமஸ் நடித்து வரும் படங்களில் ஒன்று 'அஜயன்டே ரெண்டாம் மோசனம்'. இந்த படத்தில் டொவினோ தாமஸ் 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். படமும் மூன்று விதமான காலகட்டத்தில் நடக்கும் விதமாக ஒரு வரலாற்று படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் ஜிதின் லால் என்பவர் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது நடிகர் பிரித்விராஜ் நடித்து வரும் 'குருவாயூர் அம்பலநடையில்' என்கிற படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்ற ஜிதின் லால் தான் இயக்கி வரும் அஜயண்டே ரெண்டாம் மோசனம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பிரித்விராஜிடம் காட்டி மகிழ்ந்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, 'நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் பிரித்விராஜ் வீட்டின் முன் நிற்கும் அவரது கேரவன் படிகளுக்கு அருகில் எப்படியாவது அவரை பார்த்து விட மாட்டோமா என்று காத்திருப்பேன்.. அதன்பிறகு என்னு நிண்டே மொய்தீன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போதும் அவரது கேரவன் வாசலில் அவரை அழைப்பதற்காக காத்திருப்பேன். இப்போது முதன் முறையாக அவரது கேரவனுக்குள்ளேயே நுழைந்து அவரை சந்தித்து நான் இயக்கி வரும் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை அவருக்கு காட்டும் மிகப்பெரிய பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. இதற்கு அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் படத்தை இயக்குவதற்காக நான் காத்திருக்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.