காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் |
நடிகர் பிரபாஸ் தற்போது சலார், கல்கி 2898 ஏ.டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்த அர்ஜூன் ரெட்டி, அனிமல் திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அனிமல் திரைப்படம் டிசம்பர் 1ல் வெளியாகிறது. பிரபாஸ் - சந்தீப் ரெட்டி வாங்கா இணையும் படத்திற்கு ‛ஸ்பிரிட்' என தலைப்பு வைத்துள்ளனர். இது பிரபாஸின் 25வது படம்.
இந்த நிலையில், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ‛அன்ஸ்டாப்பபிள் வித் என்.பி.கே' என்ற நிகழ்ச்சியில் அனிமல் படக்குழு கலந்துகொண்டது. அப்போது, தொகுப்பாளராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா, சந்தீப் ரெட்டி வாங்காவிடம், “எனது பேரன் தேவன்ஷ், பிரபாஸின் ஸ்பிரிட் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். படப்பிடிப்பு எப்போது தொடங்கவுள்ளது?” எனக் கேட்டார். அதற்கு இயக்குனர், “ஸ்பிரிட் படம் செப்டம்பர் 2024ல் திரைக்கு வரும்” என்றார். இந்த அப்டேட்டால் பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.