சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மலையாளத்தில் இந்த வருடம் அறிவிக்கப்பட்ட கேரள அரசு விருதுகளில் ரெக்க என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர் வின்சி அலோசியஸ். சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல், ரியாலிட்டி ஷோ, வெப் சீரிஸ் என அனைத்து ஏரியாவிலும் ஒரு ரவுண்டு கட்டி அடித்து வரும் இவர் தற்போது தனது பெயரை வின்.சி (Vincy as Win.C) என மாற்றிக் கொண்டுள்ளார். இவர் இப்படி பெயரை மாற்றிக்கொள்ள காரணம் நடிகர் மம்முட்டி தான் என்றால் நம்ப முடிகிறதா ? ஒரு வாட்ஸ் அப் சாட்டிங்கின் போது மம்முட்டி இவரது பெயரை வித்தியாசமாக வின்.சி (Win.C) என்று அழைத்துள்ளார்.
அவர் அப்படி கூறியதை கேட்டதும் தனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் ஏதோ மிகப்பெரிய வெற்றி பெற்றது போல இருந்ததாகவும் தனது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல உணர்ந்ததாகவும் கூறியுள்ள வின்சி அலோசியஸ், மம்முட்டி கூறியபடியே தற்போது தனது பெயரையும் மாற்றி விட்டதாக கூறியுள்ளார். இப்போது தனது பெயரை உச்சரிப்பதற்கு தனக்கே மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார் வின்.சி.




