2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் டொவினோ தாமஸ். படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றுதான் 'நடிகர் திலகம்'. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் டேவிட் படிக்கல் என்கிற ஒரு சினிமா நடிகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டொவினோ தாமஸ். கதாநாயகியாக பாவனா நடிக்கிறார். பிரித்விராஜ் நடித்த டிரைவிங் லைசென்ஸ் படத்தை இயக்கிய லால் ஜூனியர் இந்த படத்தை இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட 40 கோடி செலவில் இந்த படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதே சமயம் இந்த படம் முழு நீள காமெடி படமாகவும் உருவாகி வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட கதைக்கு தாங்கள் ஆராதிக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பட்டத்தை டைட்டிலாக வைத்தது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாக நடிகர் திலகம் சிவாஜி சமூக நல பேரவையைச் சேர்ந்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து மலையாள நடிகர் சங்கத்திற்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் இப்படி ஒரு படத்திற்கு நடிகர் திலகம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதால் தாங்கள் மனவேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம் படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்பது போன்ற கோரிக்கையை அவர்கள் வைத்ததாக தெரியவில்லை.