லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன். திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் 2008ம் ஆண்டு 'தலப்பரவு' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சிட்டி ஆப் காட், மேரிக்குன்றொரு குஞ்சாடு, பாம்பே மார்ச், கரியஸ்தன், ஒன்வே டிக்கெட் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
35 வயதாகும் ரெஞ்சுஷா மேனன் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அவரது அறை நீண்ட நேரம் திறக்கப்படாமலேயே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து திறந்தனர். அப்போது ரெஞ்சுஷா மேனன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து ஸ்ரீகாரியம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரெஞ்சுஷா மேனன் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.. ரெஞ்சுஷா சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் கனவுடன் இருந்தார். அது நிறைவேறவில்லை. தொலைக்காட்சி தொடர்களிலும் பெரிய கேரக்டர்கள் கிடைக்கவில்லை. மேலும் சில வருடங்களாக பண நெருக்கடியிலும் இருந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று உறவினர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். இது தவிர வேறு காரணம் ஏதும் இருக்கிறதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.