ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் | அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி | ராஷ்மிகாவின் 'மோதிர' ரகசியம்… | இந்தியன் 3 வருமா? வராதா? நாளை மறுநாள் தீர்வு கிடைக்குமா? |

மோகன்லால் நடிப்பில் ஒரே சமயத்தில் தயாரிப்பிலும் ரிலீசுக்கு தயாராகவும் கிட்டத்தட்ட நான்கு படங்கள் இருக்கின்றன. தெலுங்கில் உருவாகி வரும் 'விருஷபா' மற்றும் மலையாளத்தில் 'லூசிபர்' இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 'எம்பிரான்' ஆகிய படங்கள் தற்போது படப்பிடிப்பில் இருக்கின்றன. அதே சமயம் மோகன்லால் இயக்கி நடித்துள்ள 'பரோஸ்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து டிசம்பரில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படங்களை எல்லாம் தாண்டி வித்தியாசமான படங்களை கொடுக்கும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'மலைக்கோட்டை வாலிபன்' படம் குறித்து தான் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அனைத்தும் குவிந்துள்ளது.
இந்த படத்தில் மல்யுத்த வீரராக நடித்துள்ளார் மோகன்லால். அதற்கு ஏற்றபடி படத்தில் வித்தியாசமான தோற்றத்திலும் அவர் நடித்துள்ளார். வரும் ஜனவரி 25ம் தேதி இந்த படம் ரிலீஸாக இருக்கிறது. இதற்கு முன்னதாக மோகன்லால் படங்களின் அதிகபட்ச முதல் நாள் வசூலாக 7.2 கோடி வசூலித்த 'ஒடியன்' திரைப்படமும் 6.5 கோடி வசூலித்த 'மரைக்கார்' திரைப்படமும் அடுத்தடுத்து இருக்கின்றன. இந்த இரண்டு படங்களுமே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வியை தழுவிய படங்கள்.
அதற்குப் பிறகு வெளியான மோகன்லாலின் படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியானபோது வரவேற்பை பெற்றன. திரையரங்குகளில் வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளும்படியான முதல்நாள் சாதனை எதையும் படைக்கவில்லை. இந்த நிலையில் ஜனவரி 25ல் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்றும் ரசிகர்களிடம் இதற்கு ஏற்பட்டுள்ள கூடுதல் எதிர்பார்ப்பு காரணமாக ஏற்கனவே அவரது படங்கள் வைத்திருக்கும் முதல்நாள் வசூல் சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்றும் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக வட்டாரத்திலும் பேசிக் கொள்கின்றனர்.