ஏப்.,3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' | கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி | வெற்றி இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகர் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க இருந்த கதையில் நடிகர் ரஜினிகாந்த் | அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? | 'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ஜெயிலர். தர்பார் மற்றும் அண்ணாத்த என இரண்டு படங்களின் சரிவுக்கு பிறகு வெளியாகும் ரஜினிகாந்த் படம் என்பதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அதுமட்டுமல்ல, பீஸ்ட் பட விமர்சனங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் உடன் நெல்சன் இணைந்ததால் இந்தபடம் மீதான எதிர்பார்ப்பு, தமிழை தாண்டி மற்ற தென்னிந்திய மொழி ரசிகர்களிடமும் இருந்தது.
அந்த வகையில் கேரள தியேட்டர்களில் கிட்டத்தட்ட 80 சதவீத காட்சிகள் ஜெயிலர் படத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தன. படம் வெளியானதில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து மாலை மற்றும் இரவு காட்சிகள் இன்னும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டன. குறிப்பாக நள்ளிரவையும் தாண்டி பல தியேட்டர்களில் 3 மணிக்கு கூட காட்சிகள் திரையிடப்பட்டன. ஏற்கனவே கேரளாவில் முன்பதிவில் சாதனை செய்திருந்த ஜெயிலர் திரைப்படம் முதல்நாள் வசூலிலும் அசத்தி உள்ளது.




