''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மலையாள சினிமாவின் அடையாளமாக கருதப்படும் மோகன்லால் முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் படம் 'பரோஸ்'. கடந்த 2019ம் ஆண்டு இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. கொரோனா காரணமாக படம் தாமதமானது. தொடக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பதாக இருந்தது, பின்னர் மாற்றப்பட்டது. இதில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், நடிக்கிறார்கள்.
ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைத்திருக்கிறார். 3டியில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்கிறார்கள். இது பான் இந்தியா படமாக வெளியிடப்படுகிறது.
ஜிஜோ புன்னூஸ் எழுதிய 'பரோஸ்: கார்டியன் ஆப் டி'காமா'ஸ் ட்ரெஷர்' என்ற நாவலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம் என்கிறார்கள். இதில் வாஸ்கோடகாமாவாக ஸ்பானிஷ் நடிகர் ரபேல் அமர்கோ நடிக்கிறார். பரோஸ் கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார்.
இந்த படத்தின் பின்னணி இசையயை லிடியன் நாதஸ்வரம் லாஸ் ஏஞ்சல்ஸ், மற்றும் ஹங்கேரியில் அமைத்து வருகிறார். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. டிசம்பர் மாதம் படத்தை வெளியிட்ட திட்டமிட்டிருக்கிறார்கள்.