50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால், சாய் தன்ஷிகாவுக்கு நிச்சயதார்த்தம் : பிறந்தநாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாக இருக்கிறது. அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி இரண்டுமே மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளன. இந்த படத்தின் தெலுங்கு, மலையாள வெளியீட்டு உரிமைகள் சமீபத்தில் மிகப்பெரிய விலைக்கு கைமாறி உள்ளன. மலையாளத்தில் இந்த படத்தை கோகுலம் மூவிஸ் வெளியிடுகிறது இந்த படத்தில் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகர் மோகன்லால்.
அதனால் இந்த படம் மலையாளத்தில் வெளியாகும்போது மோகன்லாலின் போஸ்டர்களும் அதிக அளவில் புரமோஷனில் இடம்பெறும் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் கேரளாவில் தற்போது புரமோஷானுக்காக ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் ஆகியவற்றில் எல்லாவற்றிலுமே ரஜினிகாந்த் புகைப்படங்கள் மட்டுமே பிரதானமாக இடம் பெற்றுள்ளன. சில இடங்களில் ரஜினிகாந்த், தமன்னா இருவரும் இணைந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதேசமயம் இந்த படத்தில் மோகன்லால் கெஸ்ட் ரோலில் தான் நடித்துள்ளார் என்பதாலோ என்னவோ கேரளாவில் ஜெயிலர் திரைப்படம் வழக்கம் போல ரஜினியின் படமாகவே புரமோட் பண்ணப்பட்டு வருகிறது.