தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
மலையாள திரையுலகில் 90களில் கொடிகட்டி பறந்த இயக்குனர் ராஜசேனன். நம்ம ஊர் வி.சேகரைப்போல குடும்ப படங்களாக எடுத்து தள்ளியவர். ஜெயராமை வைத்து மட்டுமே 16 படங்களை இயக்கி அதில் 14 படங்களை ஹிட்டாக்கியவர். இன்னும் சொல்லப்போனால் நடிகர் பிரித்விராஜ் நடித்த முதல் படத்தை இயக்கியதும் இவர்தான். 64 வயதான ராஜசேகரன் கடந்த ஏழு வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்து தற்போது, 'ஞானும் பின்னொரு ஞானும்' என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் ராஜசேனன் சமீபத்தில் மலையாள திரையுலக பிரபலங்களுக்காக இந்த படத்தின் பிரீமியர் ஷோவை திரையிட்டார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு அவர் பெண் வேடமிட்டு வந்து, வருகை தந்த பிரபலங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பிரீமியர் ஷோவுக்கு வந்திருந்த பிரபலங்கள் குறிப்பாக பெண்கள் பலரும் அவருடன் சேர்ந்து ஆவலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.