பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
இயக்குனர் கார்த்திக் கட்டாம்னெனி இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இகிள். அனுபமா பரமேஸ்வரன், நவ்தீப், மதுபாலா, காவ்யா தபார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பீபுல் மீடியா பேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தாவ்சந்த் இசையமைக்கிறார். ரவி தேஜாவின் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வீடியோ உடன் 2024 பொங்கல் அன்று வெளியாகும் என்று படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே பொங்கல் தினத்தன்று தெலுங்கில் குண்டூர் காரம், ப்ராஜெக்ட் கே போன்ற படங்கள் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.