'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

கடந்தாண்டு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ரோஷாக் என்கிற படம் வெளியானது. நிசாம் பஷீர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக உருவாகி இருந்தது. தனது கர்ப்பிணி மனைவியின் மரணத்திற்கு காரணமான எதிரியை மம்முட்டி பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை உளவியல் கண்ணோட்டத்தில் படமாக்கி இருந்தார் இயக்குனர் நிசாம் பஷீர். இந்த படத்தை தொடர்ந்து அவர் மோகன்லால் படத்தை இயக்குவார் என கடந்த இரண்டு தினங்களாக ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக நடிகர் திலீப் நடிக்கும் படத்தை இயக்குவதாக ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிசாம் பஷீர். இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் ஆன சுராஜ் வெஞ்சார மூடு நடிக்க உள்ளார். ரோசாக் படத்திற்கு கதை எழுதிய சமீர் அப்துல் தான் இந்த படத்திற்கும் கதை எழுதுகிறார். திலீப் தற்போது பாந்த்ரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த புதிய படத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.