''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தெலுங்கு திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நாகசைதன்யா, தற்போது முதல் முறையாக வெங்கட் பிரபு டைரக்சனில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள கஸ்டடி திரைப்படம் மூலம் தமிழில் அடி எடுத்து வைக்க இருக்கிறார். இந்த படம் வரும் மே 12ம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீஸாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஹைதராபாத், சென்னை என இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் நாகசைதன்யா.
இதற்கு முன்னதாக பிரபல தெலுங்கு இயக்குனர் பரசுராம், நாகசைதன்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்று நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வந்தது. குறிப்பாக பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்க்காரு வாரி பாட்டா என்கிற ஹிட் படத்திற்கு முன்னதாகவே இவர்கள் கூட்டணி இணைகிறது என்கிற செய்தி பேசப்பட்டு வந்தது. மகேஷ்பாபுவின் வெற்றி படத்திற்குப் பிறகு மீண்டும் நாகசைதன்யா படத்தை பரசுராமன் இயக்குவார் என்கிற செய்தி இன்னும் தீவிரமானது.
ஆனால் இயக்குனர் பரசுராமோ இன்னும் ஸ்கிரிப்ட் தயார் ஆகவில்லை என்பது போன்று சாக்குகளை சொல்லிக்கொண்டு நாகசைதன்யா படத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. நாகசைதன்யாவும் ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை செய்ய சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. இதனாலேயே அந்தப்படம் ட்ராப் ஆனதாக சொல்லப்படுகிறது. சமீபத்திய பேட்டியின்போது, பரசுராம் படத்தில் நடிப்பது என்னவாயிற்று என நாகசைதன்யாவிடம் கேட்கப்பட்டபோது உடனே மூடு மாறிய நாகசைதன்யா, “இயக்குனர் பரசுராம் பற்றி பேசுவது டைம் வேஸ்ட். அவர் எனது நேரத்தை நிறைய வேஸ்ட் செய்து விட்டார். இந்த டாபிக் பற்றி பேசுவதைக் கூட நான் விரும்பவில்லை” என்று வேண்டா வெறுப்பாக பதில் அளித்தார். அனேகமாக இனிவரும் காலத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.