ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
மலையாளத்தின் முன்னணி இயக்குனரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி உள்ள படம் நண்பகல் நேரத்து மயக்கம். இந்த படத்தில் மம்முட்டி, ரம்யா பாண்டியன், அசோகன், பூ ராமு, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள இந்த படத்தை இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
கடந்த வாரம் (ஜனவரி 19) அன்று கேரள மாநிலத்தில் வெளியானது. ஆனால் தமிழ்நாட்டில் சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் வெளியாகவில்லை. இந்த படத்தில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளுமே கலந்திருப்பதால் டப்பிங் எதுவும் செய்யப்படவில்லை. இந்த படம் நாளை (ஜனவரி26) தமிழகத்தில் வெளியிடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ட்ரீம் வாரியர் நிறுவனம் வெளியிடுகிறது.
பட வெளியீட்டுக்கு பிறகு மம்முட்டி படம் பற்றி கூறியிருப்பதாவது: இது தமிழ், மலையாளம் என்ற மொழிகளைத் தாண்டிய படைப்பு. கேரளாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கியிருந்தாலும், பெரும்பாலான படத்தின் வசனங்கள் தமிழிலேயே அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் பின்னணி இசைக்கு பதிலாக, பிரபலமான பழைய க்ளாஸிக் தமிழ் திரைப்படங்களின் பாடல்களும், வசனங்களுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
ரம்யா பாண்டியன், பூ ராம், நமோ நாராயணா, ராமச்சந்திரன் துரைராஜ் என படத்தில் தமிழ் நடிகர்கள் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். கும்பகோணம் பக்கம் ஒரு கிராமத்தில் நடந்த படப்பிடிப்பின் போது கிராம மக்கள், நடிகர்கள் என அனைவரும் ஒன்றாக பேசிப், பழகி, உணவருந்தி குடும்பம் போலவே இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கதையைக் கேட்டவுடன் இதைத் தவற விடக்கூடாது என்று எனக்கு தோன்றிவிட்டது. கண்டிப்பாக தமிழ் ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
எல்லா படமும் ரிஸ்க் எடுத்துதான் நடிக்கிறேன். மிஸ் செய்யக்கூடாது என நினைத்து செய்யும் படங்கள்தான் இவையெல்லாம். விருதுக்கான படங்கள், வெகுஜன ரசிகர்களுக்கான படங்கள் என்பதன் இடைவெளி தற்போது குறைந்துவிட்டது. தற்போது இரண்டு படங்களுக்கும் ஒரே பார்வையாளர்கள் தான் வருகிறார்கள். இது இந்த மாதிரியான படம் என்பது தெரிந்தே வருகிறார்கள். தோல்வியில்லாமல் வெற்றியில்லை. நாம் செய்யும் ஒரு செயலுக்கான ரிசல்ட் எதிர்பார்த்த அளவில் வராத போது ஏமாற்றமாவோம். அதை நாம் தவிர்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.