'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும் தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகருமான கிருஷ்ணா சமீபத்தில் காலமானார். அதுமட்டுமல்ல இந்த வருடத்திலேயே இதற்கு முன்னதாக மகேஷ்பாபுவின் அண்ணன் மற்றும் அவரது அம்மா ஆகியோர் அடுத்து அடுத்து காலமானார்கள், அப்படி தனது குடும்பத்தில் உள்ள நபர்களை ஒவ்வொருவராக பறிகொடுத்த மகேஷ்பாபு சமீபத்திய அவரது தந்தையின் மரணத்தால் ரொம்பவே மனமொடிந்து காணப்பட்டார். இந்த நிலையில் அவர் தற்போது த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
அதுமட்டுமல்ல சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற விருந்து ஒன்றில் படத்தின் இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், இசையமைப்பாளர் தமன் மற்றும் தனது மனைவி நம்ரதா உள்ளிட்ட சிலருடன் கலந்து கொண்டார். அப்போது அங்கே அவர்களுக்கு வீட்டில் சமைத்த பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. அதில் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா. அந்த புகைப்படத்தில் மகேஷ்பாபு படக்குழுவினருடன் சிரித்தபடி காட்சியளிப்பதை பார்க்கும்போது அவர் மீண்டும் தனது இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என்பதையே காட்டுகிறது