மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடித்த ரோஷாக் என்கிற திரைப்படம் வெளியானது. சைக்காலஜிக்கல் திரில்லர் ஆக உருவாகியிருந்த இந்த படத்தில் தனது கர்ப்பிணி மனைவியின் இறப்புக்கு காரணமானவர்களை வித்தியாசமான முறையில் எப்படி மம்முட்டி பழிவாங்குகிறார் என்பதை மையப்படுத்தி உருவாகி இருந்தது. இந்த படத்தை நிஜாம் பஷீர் என்பவர் இயக்கியிருந்தார். மம்முட்டியே இந்த படத்தை தயாரித்து இருந்தார். அவரது மகன் துல்கர் சல்மான் இந்த படத்தை தனது வே பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக வெளியிட்டிருந்தார்.
படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் வரவேற்பையும் அதே சமயம் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இந்த படத்தில் பணியாற்றிய குழுவினருக்கு பரிசுகளை வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் மம்முட்டியும் துல்கர் சல்மானும். மேலும் இந்த படத்தில் தனது உருவத்தையே காட்டாமல் முகமூடி அணிந்தபடி கண்களால் நடித்த நடிகர் ஆசிப் அலிக்கும் தங்களது நன்றியை தெரிவித்து பரிசு வழங்கினர்.