ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

மலையாள திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர், இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் நடிகர் சீனிவாசன். இவர் இயக்குனர் வினித் சீனிவாசனின் தந்தையும் கூட. கடந்த சில மாதங்களாகவே நடிகர் சீனிவாசன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன்பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஓய்வு எடுத்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான இவரது புகைப்படம் ஒன்று, எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே என்று அவரது தோற்றம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக இருந்தது. அதேசமயம் அவரது மகன் வினீத் சீனிவாசன் விரைவில் தன் தந்தை புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். நீங்கள் மீண்டும் அவரை பழைய சீனிவாசன் ஆக பார்க்கலாம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் வெளியான லவ் ஆக்சன் ட்ராமா மற்றும் வினித் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான ஹிருதயம் ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வைசாக் சுப்பிரமணியம் என்பவரது திருமண நிகழ்வில் சீனிவாசன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் பழையபடி உற்சாகத்துடன் அனைவரிடமும் கலகலப்பாக பேசியது திருமண விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதுகுறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி அவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிகழ்வில் மோகன்லால் நடிகை, கீர்த்தி சுரேஷின் தந்தை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.




