ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' |
மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான 'லூசிபர்' படத்தைத் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க 'காட்பாதர்' என்ற பெயரில் ரீமேக் செய்து நேற்று வெளியிட்டார்கள். படத்திற்கு நேற்றே நல்ல விமர்சனங்கள் வர ஆரம்பித்தது. ஆனால், முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் 38 கோடியும், தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் 20 கோடியும் மட்டுமே இந்தப் படம் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கான உலக அளவிலான தியேட்டர் வியாபாரம் சுமார் 90 கோடி வரை நடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். சுமார் 120 கோடி வரை வசூலித்தால் மட்டுமே இந்தப் படம் வெற்றிப் படமாக அமையுமாம்.
அரசியலில் ஈடுபட்டதால் சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார் சிரஞ்சீவி. அதற்குப் பிறகு அவர் விஜய் நடித்து தமிழில் வெளிவந்த 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'கைதி நம்பர் 1' மூலம் மீண்டும் வெற்றிகரமாக ரீ என்ட்ரி ஆனார். ஆனாலும், அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த படங்கள் பிரம்மாண்டமாகத் தயாரானாலும் வெற்றிப் படங்களாக அமையவில்லை. 'சைரா நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா' ஆகிய இரண்டு படங்களும் தோல்வியைத் தான் தழுவியது.
'காட் பாதர்' படத்திற்கு பாசிட்டிவ்வாக விமர்சனங்கள் வந்ததால் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் நாள் வசூல் குறைவாக இருப்பது கவலையை அளித்துள்ளதாம். ரீ என்ட்ரிக்குப் பிறகு வெளிவந்த சிரஞ்சீவி படங்களில் இந்தப் படம்தான் தெலுங்கு மாநிலங்களில் குறைவான வசூலைக் கொடுத்துள்ளதாம்.