ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
தமிழில் மண்ணுக்குள் வைரம், பூந்தோட்டக் காவல்காரன், தாய்மேல் ஆணை, இதயத் திருடன் உட்பட பல படங்களில் நடித்தவர் வாணி விஸ்வநாத். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மலையாளியான இவர் மலையாள நடிகர் பாபுராஜை திருமணம் செய்து கொண்டார். பாபுராஜ் தமிழில் ஜனா, ஸ்கெட்ச், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கேரளாவில் வசித்து வரும் இவர்கள் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 2018ம் ஆண்டு கூடாஷா என்ற படத்தை தயாரித்தனர். படத் தயாரிப்புக்காக கேரள மாநிலம் திருவில்வமலா என்ற பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரிடம் ரூ.3.14 கோடியை கடனாக பெற்றுள்ளனர். ஆனால் வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாக கணவன், மனைவி இருவர் மீது ரியாஸ் ஒட்டப்பாலம் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.