ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், மாஸ்டர் பீஸ், பிரேக்கிங் நியூஸ், அர்ச்சனா 31 நாட் அவுட், காயங்குளம் கொச்சுன்னி, நந்தனம் உட்பட 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தவர் பாபுராஜ் வாழப்பள்ளி. நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.
59 வயதான இவர் தனது குடும்பத்துடன் கோழிகோட்டில் உள்ள குதுருசால் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, ஓமச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மறைந்த பாபுராஜ் வாழப்பள்ளிக்கு சந்தியா என்ற மனைவியும் பிஷால் என்ற மகனும் உள்ளனர். பாபுராஜ் வாழப்பள்ளி மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.