‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

தமிழ், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வாணி விஸ்வநாத். இவர் மலையாள நடிகர் பாபுராஜை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வசித்து வருகிறார். இருவரும் இணைந்து சில படங்களை தயாரித்தார்கள். படம் தயாரிக்க வாங்கிய 3 கோடி ரூபாய் கடனை திருப்பித் தரவில்லை என்று ரியாஸ் என்பவர் இவர்கள் மிது ஒட்டப்பாலம் போலீசில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து பாபுராஜ் அளித்துள்ள விளக்கம் வருமாறு : எங்கள் மீது பொய் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. படத்துக்கும், என் மனைவி வாணி விஸ்வநாத்துக்கும் சம்மந்தம் இல்லை. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு சில பிரச்சினைகள் இருந்ததால் எனது பட தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தை வெளியிடுமாறு கோரினர். அந்த படத்துக்கு நான் சம்பளம் வாங்கவில்லை. படக்குழுவினருக்கான உணவு மற்றும் தங்குமிடம் எனது ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான பணத்தை படம் வெளியானதும் தருவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் படம் தோல்வி அடைந்து விட்டது. புகாரை சட்டப்படி சந்திப்பேன்.
இவ்வாறு பாபுராஜ் விளக்கம் அளித்துள்ளார்.