ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
நடிகர் விக்ரம் ஏகப்பட்ட கெட்டப்புகளில் நடித்து முடித்துள்ள படம் 'கோப்ரா'. 'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டியும், வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டுள்ளது. அதோடு விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. இப்படம் ஆகஸ்ட் 11 -ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தில் கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் திட்டமிட்டபடி பணிகள் முடியவில்லையாம். எனவே இப்படம் சொன்னபடி வெளியீட்டு தேதியில் வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.