மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' |

தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படும். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த சம்பள உயர்வு திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது சினிமாக்கள் நல்ல வசூலை குவித்து வருவதால் தொழிலாளர் சங்கம் சம்பள உயர்வு கேட்டு வந்தது. அதற்கு தயாரிப்பாளர் சங்கம் பாராமுகமாக இருந்தது.
இதையடுத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 21ம் தேதி முதல் ஆந்திரா, தெலங்கானாவில் எந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. அங்கு நடந்து வந்த தமிழ் படங்களின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தினர், திரைப்பட தொழிலாளர் சங்கத்தினரை அழைத்து தெலுங்கானா அமைச்சர் சீனிவாஸ் யாதவ், பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. நேற்று முதல் தொழிலாளர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.