அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

பழம்பெரும் மலையாள நடிகர் காலித். பிரபல டைரக்டரான காலித் ரகுமான் மற்றும் ஒளிப்பதிவாளர்களான ஷைஜு காலித் மற்றும் ஜிம்ஷி காலித் ஆகியோரின் தந்தை. 74 வயதான காலித், காஜூட் ஆண்டனியின் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வந்தது.
நேற்று காலித் வழக்கம்போல படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். படப்பிடிப்பின் இடையே கழிப்பறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து சென்று பார்த்தபோது காலித் கழிப்பறைக்குள் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை கொச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவர் மாரடைப்பில் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த காலித், நாடக நடிகராக இருந்து சினிமா நடிகர் ஆனவர். 1973ம் ஆண்டு பெரியார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தாப்பானா, அனுராக கரிக்கின் வெள்ளம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இவர் டிவி தொடரில் நடித்து வந்தார். காலித் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.