சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
கடந்த 2017ல் பிரபல நடிகை ஒருவர் கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, இந்த வழக்கு விசாரணை அதிகாரிகளை அவர் கொல்ல திட்டம் தீட்டியதாகவும், நடிகை துன்புறுத்தப்பட்ட அந்த வீடியோ காட்சிகளை தனது மொபைல் போனில் பார்த்ததாகவும், திலீப்பின் நண்பராக இருந்து தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ள இயக்குனர் பாலசந்திர மேனன் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து திலீப் மீது புதிய வழக்கு பதியப்பட்டு அந்த வழக்கு சம்பந்தமான விசாரணையும் நடைபெற்று ஒரு வழியாக அதில் திலீப்புக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அதேசமயம் திலீப்பிடம் இருந்த நான்கு மொபைல் போன்கள் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு பாரன்சிக் டிபார்ட்மென்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது அந்த மொபைல் போன்களில் சில குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளதாக பாரன்சிக் அதிகாரிகளிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாம்.
இந்த மொபைல் போன்களை ஒப்படைப்பதற்கு முன்பாக திலீப் அவற்றை மும்பையிலுள்ள ஒரு நிறுவனத்திடம் கொடுத்து சரி செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த மொபைல் சர்வீஸ் சென்டரில் விசாரிப்பதற்காக கேரள போலீசார் மும்பை சென்றுள்ளனராம். இதுபற்றி ஓய்வுபெற்ற போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இது போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தன்னுடைய மொபைல்போனில் ஏதாவது குளறுபடி செய்தால் அதுவே கூட அவருக்கு எதிரான சாட்சியமாக தான் மாறும். இதுபோக மும்பையிலிருந்து அந்த போனில் என்னென்ன குளறுபடிகள் செய்யப்பட்டன என்கிற விபரங்கள் தெரிய வந்தால் அது இன்னும் திலீப்புக்கு எதிராகவே திரும்ப வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளாராம்.